Map Graph

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கேரளம் மாநிலத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அல்லது கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பது இந்தியா மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு மாநில பொதுத்துறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய விண்வெளி விஞ்ஞானியுமான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக 2015ஆம் ஆண்டு அன்று இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்துடன் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைவுப் பெற்றுள்ளன. இக்கல்லூரிகள் கேரளாவின் 14 மாவட்டங்களில் பரவியுள்ளன. இது ஒப்பீட்டளவில் புதிய மற்றும் சீர்திருத்தப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும்.

Read article
படிமம்:APJ_Abdul_Kalam_Technological_University_logo.png